முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் தார் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரோடைகள்!

சங்கரன்கோவிலில் தார் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரோடைகள்!

X
தார்

தார் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரோடை

Tenkasi News: சங்கரன்கோவிலில் தார் சாலையின் நடுவே பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாலை விரிவாக்க பணி 2 வழிச்சாலை என புதிதாக பல திட்டங்களின் கீழ் சாலைகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதமாக போடப்பட்ட தார் சாலையின் கீழ் செல்லும் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் நீரோடை போல் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கும் நேரத்தில் குடி தண்ணீர் இப்படி வீணாவது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் நகராட்சியிடம் பலமுறை புகார் செய்தும், தேங்கி இருக்கும் நீரை அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்களே தவிர, விரிசல் விழுந்த குடிநீர் குழாயை சரி செய்யவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

புளியங்குடியை சாலையில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் தான் தண்ணீர் நீரோடை போல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை கடந்து பங்கில் பெட்ரோல் போட வரும் பொதுமக்கள் இதனால் கடும் மதிப்பிற்கு உள்ளாகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் அதில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : புதுவையில் அடுத்த 2 மாதங்களில் மீன்களின் விலை உச்சத்தை தொடும்..

சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் வேலையில் ரதி வீதிகளிலும் ஆங்காங்கே குழிகள் இருப்பதால் தேர் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வருடங்களில் தேர் சாலையில் இருந்த குழியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் சங்கரன்கோவிலில் பிரதான சாலையாக இருக்கும் ராஜபாளையம் ரோடு திருவேங்கடம் சாலை என பல பகுதிகளில் அவ்வப்போது தண்ணீர் ஓடை போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi