ஹோம் /தென்காசி /

தென்காசி பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?

தென்காசி பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?

Tenkasi images

Tenkasi images

Thenkasi news : கேரளாவை போல தமிழ்நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக தென்காசி திகழ்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி தனி மாவட்டமாக பிறந்த நாள்  (22.11.2019).  நிர்வாக வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக 22 நவம்பர் 2019 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பிரிக்கப்பட்டது.

  பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 33வது மாவட்டமாக பரிணமித்தது தென்காசி மாவட்டமாகும். இது 8 தாலுகாவுடன் பிரிக்கப்பட்டு உள்ளது. தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய எட்டு தாலுகா இதில் அடங்கும்.

  தென்காசி மற்றும் சங்கரன்கோவில் என்ற இரு வருவாய் கோட்டங்கள் இதில் அடங்குகின்றது. தென்காசி மாவட்டம் திருநெல்வேலியின் தென்பகுதியும், விருதுநகரில் வடபகுதியும், தூத்துக்குடியில் கிழக்குப்பகுதியும், கேரளத்தின் மேற்கு பகுதிக்கும் நடுவே மேற்கு தொடர்ச்சி மலையுடன் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கும் மாவட்டம் தான் தென்காசி.

  கேரளாவை போல தமிழ்நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த ஒரு இடமாக தென்காசி திகழ்கிறது. குற்றாலம், அணைகள், நீர்த்தேக்கங்கள், சுற்றுலா தலங்கள், பழம்பெரும் கோவில்கள் என எண்ணற்ற சுற்றுலா தளங்களை கொண்டுள்ளது தென்காசி.

  தென்காசியை பிரித்ததால் என்ன நன்மைகள் என்ன தான் தென்காசியை திருநெல்வேலியில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறினாலும், அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம் என்பதால் இதனை நிர்வாகம் செய்வதில் பெரிய சிக்கல்கள் இருந்துள்ளது. முன்னர் காலத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்துடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படிங்க : தென்காசியில் மலை மீது ஒரு சொர்க்கம்.. திருமலை முருகன் கோயிலுக்கு போயிருக்கீங்களா..? 

  1986க்கு பிறகே தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதை போலவே 8 தாலுகா கொண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி அரசு அலுவலகத்திற்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க தேவை இல்லை. மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் எளிதில் வந்து போகும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பேருந்து நிலையத்தின் அருகில் அரசு மருத்துவமனை அமைந்து இருப்பது மக்களுக்கு எளிதில் வந்து போவதற்கு வசதியாக உள்ளது.

  செய்தியாளர் : சுபகோமதி ( தென்காசி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Tamil News, Tenkasi