சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அஜித் சில தினங்களுக்கு முன்னர் பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்து கிடந்தான். அப்போது எதிர்பாராத விதமாக வெறிநாய் ஒன்று அவனை கடித்துள்ளது.
அதை பொருட்படுத்தாமல் வீடு திரும்பிய அஜித்துக்கு வெறிநாய் கடித்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். உடனடியாக பெற்றோர் அவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சையில் ஏதும் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க : அவ்வையார் விருதுக்கு தென்காசி மக்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!
இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 23ம் தேதி மாணவன் அஜித் உயிரிழந்தான். இந்த செய்தி ஒட்டுமொத்த தென்காசி மக்களையே வருதத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கடந்த ஒரு வருடத்தில் சுமார் 5000 பேர் தெரு நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் சராசரியாக 400-ல் இருந்து 450 பேர் தெரு நாய் கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகை தருகின்றனர்.
ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை. மேலும், 8 மாதத்திற்கு முன்பாக நடந்த சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த மற்றும் கருத்தடை செய்வதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை” என குற்றஞ்சாட்டுகின்றனர்.
தெரு நாய்கள் இனப்பெருக்கம் குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தெரு நாய்களை கட்டுப்படுத்துவது நகராட்சிக்கு சவாலான ஒன்று. 20, 30 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனினும் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi