முகப்பு /தென்காசி /

பூலித்தேவர் படையின் முக்கிய தளபதி.. வெண்ணிகாலாடிக்கு விஸ்வநாதபேரியில் திருவுருவசிலை!

பூலித்தேவர் படையின் முக்கிய தளபதி.. வெண்ணிகாலாடிக்கு விஸ்வநாதபேரியில் திருவுருவசிலை!

பூலித்தேவர் படையின் முக்கிய தளபதி

பூலித்தேவர் படையின் முக்கிய தளபதி

Periya Kaladi - VenniKaladi : வெண்ணிக் காலாடியார் என்பவர் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். இவரை பெரிய காலாடியார் என்றும் அழைக்கின்றனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரியில் சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிகாலாடியார்க்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவருட்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாமன்னர் பூலித்தேவன்நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டமன்னன். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

வெண்ணிக் காலாடியார் என்பவர் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். இவரை பெரிய காலாடியார் என்றும் அழைக்கின்றனர். பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய கான்சாகிப், இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்து கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலாடியார் சில வீரர்களுடன் சென்று அம்முகாமை தாக்கினார்.

இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

மேலும் வெண்ணிக் காலாடியார் , தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க தன் குதிரையில் பலத்த காயத்துடன் பூலித்தேவரிடம் வந்தடைந்தார். பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை புலித்தேவரிடம் நடந்த கதைகளை கூறியவாறு மரணம் அடைந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பூலித்தேவனின் தளபதியாக இருந்த வெண்ணி காலாடியாரின் சிறப்பை போற்றும் வகையில் தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரியில் அவருக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் சிலை வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தென்காசி மாவட்ட மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    First published:

    Tags: Local News, Tenkasi