தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தில் 2022- 2023ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளது.
இறகுப்பந்து, கடற்கரை விளையாட்டு போட்டிகள், கபடி, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கவுள்ளன. அதேபோல் தடகளம், சிலம்பம், நீச்சல் பளு தூக்குதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருப்பதால் இதில் பங்கு பெற தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதுபோல் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு 2 ஆண்டுகள் வரை அவர்கள் மேற்கொண்ட விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப பெறும் வகையில் உதவித்தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஊக்கதொகையை பெறவும் sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : சர்வதேச கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை
இந்த திட்டத்தில் பயன் பெறும் வீரர் வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள். காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் ஏதும் இருப்பின் அதையும் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.
மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
உதவித்தொகை காலத்தில் 3 மாதங்கள் வரை விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், 6 மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், 2 ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்று தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு பேம்பாட்டு ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi