தென்காசி மாவட்டத்தில் விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான முக்கிய அறிவிப்பை கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் 2023-2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் சார்பாக 2023-2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்காக விளையாட்டு விடுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதில் 6ம் வகுப்பு, 7ஆம் வகுப்பு. 8ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பிற்கு விளையாட்டு விடுதி சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 5ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் ஆகிய வகுப்புகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கான விளையாட்டு விடுதி தேர்வு நடைபெற உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ,மாணவியர்கள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை 16.05.2023 முதல் www.sdat.tngov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5.00மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஒற்றுக்கொள்ளப்படமாட்டாது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.052023 அன்று காலை 7,00 மணியளவில் ஆலங்குளம் தாலூகா, சிவலார்குளம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மினி விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளதால் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04633 212580 மற்றும் 9786918406 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi