முகப்பு /தென்காசி /

கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..! சங்கரன்கோவில் பக்தர்களின் நம்பிக்கை..

கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..! சங்கரன்கோவில் பக்தர்களின் நம்பிக்கை..

X
கடன்

கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க.

Debt stress | கடன் தொல்லை நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இருக்கும் முப்புடாதி அம்மன் திருக்கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. பைரவருக்கு பூ மாலை, வடை மாலை கொண்டு அலங்காரங்கள் செய்து தீபாராதனைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர்.

மேலும் பைரவருக்கு தேங்காய் விளக்கு, தடியங்காய் விளக்கு, செவ்வாழைப்பழம் விளக்கு போன்ற புதுமையான விளக்குகளும் பக்தர்களால் போடப்பட்டிருந்தது. அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் அடிஎடுத்து வைக்காது விலகி ஓடும். விலகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதையும் படிங்க : குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

மேலும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் தொகையில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், பைரவரை மனதார வழிபட்டு செவ்வரளி மலர் சாற்றினால் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

First published:

Tags: Local News, Tenkasi