ஹோம் /தென்காசி /

தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. அதிகாரிகளுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை...

தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. அதிகாரிகளுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை...

தென்காசி

தென்காசி

Tenkasi District News : தமிழக முதலமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி வருகை தருகிறார். அவரது வருகையை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

வரும் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8.12.2022 அன்று வருகிறார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இதையும் படிங்க : தென்காசி மாவட்டத்தில் உளுந்து சாகுபடிக்கு அசத்தலான மானியம் அறிவிப்பு

முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, இவ்விழா சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் .தனுஷ்குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: CM MK Stalin, Local News, Tenkasi