ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் செய்வது செல்வ வளத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்மன்.
பாண்டியமன்னனால் கி.பி.1022 ஆம் ஆண்டு இந்த கோயில்கட்டப்பட்டது. இந்த கோயிலில்ஆண்டுதோறும்வரும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் ”சோமவார பூஜை” எனப்படும் சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும் அது குறித்து ஒரு பதிவு.
சோம வாரம் என்பது திங்கட்கிழமைகுறிக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நெல் மணிகளை கொண்டு 'ஓ' என்னும் வடிவத்தில் எழுதி மேல் 108 சங்குகளில் புனித நீரை ஊற்றி அதனை கங்கை நீருக்கு ஒப்பாக வைத்து பூஜைகள் செய்வர்.
அதற்கு முன்பாக, இரு குடங்களில் தண்ணீர் வைத்து அதற்கு மேல் தேங்காய் வைத்து கும்பம் போல் தயார் செய்து, ஹோமம் வளர்த்து மந்திரங்கள் ஓதப்படும். அதன் பிறகு கும்பத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டு கும்பத்தில் இருக்கும் நீரை கொண்டு சங்கர நாராயணனுக்கும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் பின்னர் மற்ற அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த சங்காபிஷேகம் கார்த்திகை மாதம் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 இல் இருந்து ஆரம்பமாகும்.
இதையும் படிங்க | மொத்தம் 4டன் மலர்கள்... திருப்பதி திருச்சானூரில் கோலாகமாக நடந்த புஷ்ப யாகம்!
சங்காபிஷேகத்தின் சிறப்புகள் என்ன?
பொதுவாக சங்கு செல்வங்களை குறிக்கும் ஒரு பொருளாகும் இந்த சங்காபிஷேகம் 108 சங்குகளை கொண்டு செய்வதால் இதில் கலந்து கொண்டாலோ அல்லது அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சங்கை வாங்குவதால் வீட்டில் செல்வ வளம் நிறைந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் சோம வாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi