தமிழ்நாட்டில், வரும் 14ஆம் தேதி போகியுடன் தொடங்கி பொங்கல் பண்டிகை கொண்டாபட்டடுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேசுவரி சரவணன் குப்பைகளை மறுசுழற்சி மையங்களில் வழங்க வேண்டும் என்றும், புகையில்லா போகியைக் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சங்கரன்கோவில் நகராட்சியில் போகிப் பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்க கூடாது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அகற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் அவற்றை வாரச்சந்தை ரோடு, திருவேங்கடம் சாலை உரக்கிடங்கு மற்றும் பி.எஸ்.நகர் பகுதிகளில் உள்ள நகராட்சி எம்.சி.சி. பசுமை மறுசுழற்சி மையங்களில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்படைக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் டயர், துணி மற்றும் பழைய குப்பைகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது.
Must Read : நீங்காத நினைவைக் கொடுக்கும் தென்காசி மாவட்ட அணைகளுக்கு ஒரு டிரிப் அடிங்க..
இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹரிஹரன் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் முன்னிலையில் நகராட்சி ஆய்வாளர்கள் கருப்பசாமி, மாரிமுத்து, மாரிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Local News, Pongal 2023, Tenkasi