ஹோம் /தென்காசி /

மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய் - தென்காசி கலெக்டர் முக்கிய அறிவுரை

மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய் - தென்காசி கலெக்டர் முக்கிய அறிவுரை

பெரியம்மை

பெரியம்மை

Tenkasi District | மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய் குறித்தும், நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிவை பற்றியும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தமிழகத்தில் ஆங்காங்கே மாடுகளை பெரியம்மை நோய் பரவி தாக்கி வருகிறது, இந்நிலையில், இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாடுகளில் பெரியம்மை நோய் என்பது ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

உண்ணி, கொசு போன்ற கடிக்கும் ஈக்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்தும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக மாடுகள் வாங்கி வருவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கும் நோய் பரவுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நோயுற்ற மாடுகளில் கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உண்ணாமை, கண்ணில் நீர் வடிதல், உடலின் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். கன்றுகளில் நோயின் வீரியம் அதிகமாக காணப்படும்.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

கறவை மாடுகளின் மடி மற்றும் காம்புகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு சில சமயம் மடி நோயாக மாறும் இயல்புடையது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாக குறையும். மேற்கூறிய நோய் அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Cow, Local News, Tenkasi