முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா... நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி சிவகாமி அம்பாள் வீதி உலா..!

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா... நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி சிவகாமி அம்பாள் வீதி உலா..!

X
சங்கரன்கோவிலில்

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா

Tenkasi | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் பச்சை பட்டு உடுத்தி விஷ்ணு அம்சத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து காட்சியளித்து வருகின்றனர்.

சித்திரை திருவிழா 7-ம் திருநாளில் இரவு சிவகாமி அம்பாள் சமேத நடராஜ ருத்ரன் அம்சத்தில் சிகப்பு பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நள்ளிரவு இரண்டு மணிக்கு பிரம்மா அம்சத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வெள்ளை பட்டு உடுத்தி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

அதனைத் தொடர்ந்து 8-ம் திருநாளில் காலை 7 மணி அளவில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா வந்தார்.

top videos

    இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 3ஆம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் விநாயகர், சுவாமி, அம்பாள் என 3 தேர்கள் ஓடும்.  இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Hindu Temple, Tenkasi