முகப்பு /தென்காசி /

பௌர்ணமி நாளில் மட்டும் அனுமதி.. குற்றாலத்தில் இப்படி ஒரு இடமா?

பௌர்ணமி நாளில் மட்டும் அனுமதி.. குற்றாலத்தில் இப்படி ஒரு இடமா?

X
சித்தர்

சித்தர் குகை

Sidhdhar caves in coutrallam | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பௌர்ணமி நாளில் மட்டும் அனுமதிக்க கூடிய செண்பகாதேவி அருவிக்கு அருகில் குகை ஒன்று உள்ளது.

  • Last Updated :
  • Courtalam (Courtallam), India

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருக்கிறது செண்பகாதேவி அருவி. இந்த அருவிக்கு அருகில் உள்ளது 18 சித்தர்கள் தியானம் செய்த குகை. வல்லநாட்டு சாமிகள், வள்ளலாரை நினைத்து வழிபட்டு இங்கே விளக்கு போட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. நவ கிரகங்களின் பிடியில் நேரம் சரியில்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நன்மை நடக்கும் என்கின்றனர்.

அதன்படி, இங்கு வந்து விளக்கு போட்டு அன்னதானம் செய்து வழிபட்டால் நினைத்தவை நடக்குமாம். ஆனால், தற்போது ஆங்காங்கே காடுகளுக்குள் அதிக அளவில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், காட்டுக்குள் உள்ள இந்த குகையில், விளக்கு போடுவதால் காட்டு தீ பரவுவதற்கான அபாயம் ஏற்படும் என, வனதுறையினரால் தற்போது இங்கு பொதுமக்கள் சென்று விளக்கு போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்தர் குகை

வல்லநாட்டு சாமிகள் தியானம் செய்த குகையில் நவகிரகங்கள் மற்றும் சிவலிங்கம் அமைந்திருக்கும் இந்த குகைக்கு, நீங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்தால் வனத்துறையினரின் அனுமதி பெற்ற பின்பு தான் செல்ல முடியும்.

மேலும் இந்த குகைக்குள் குறுகிய பாதையாக இருப்பதால், இரண்டு நபருக்கு மேல் குகைக்குள் சென்று வழிபட முடியாது. ஒருவருக்கு பின் ஒருவர் என்றுதான் சென்று வழிபட முடியும். அதுவும் நிமிர்ந்து செல்ல முடியாது குனிந்தவாறு சிவனை வழிபட்டுக் கொண்டே சென்று வர முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், நவகிரகங்கள், தக்ஷிணாமூர்த்தி மற்றும் சிவலிங்கம் அமைந்திருக்கும் சித்தர்கள் வழிபாடு செய்த குகைக்கு மக்களை அனுமதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi