முகப்பு /தென்காசி /

தென்காசியில் விரைவில் வருகிறது சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்.. குஷியில் மக்கள்!

தென்காசியில் விரைவில் வருகிறது சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்.. குஷியில் மக்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi | தென்காசியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் புதிதாக சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் , பொதிகை மலை சித்தா பூங்கா ஆகியவற்றை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள் ஆலோசனையில் கூட்டத்தில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர்.ஆர். பிருந்தா தேவி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், திட்ட குழு உறுப்பினர் டாக்டர். சிவராமன் அவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi