தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஶ்ரீஅங்காளம்மன் கோவிலில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கீழப்பாவூர் அங்காள அம்மன் கோவிலில் உற்சவ இலந்தினி அம்மன் சிவராத்திரியை முன்னிட்டு 3 மண்பானை விளிம்பில் வேல் ஆயுதம், சூலாயுதம், வாலயுதம் என மூன்றும் சுமார் 1.30 மணி நேரம் நடக்குமாம். மேலும் சிவராத்திரி அமாவாசையன்று பஞ்சமி திதியில் பானையின் நுனியில் மூன்றே முக்கால் நாழிகை வேல், வால், சூலாயுதம் நிற்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
சிவராத்திரி அன்று அநேக கோவில்களில் இந்த நிகழ்வு நடந்தாலும், ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அன்று புதிதாக வாங்கிய 3 மண்பானையின் விளிம்பில் அழகு பார்க்கும் காட்சி ஒரு தனி சிறப்பாகும். நள்ளிரவில் கிளம்பிய இலந்தினி அம்மன் சப்பரம் ஊர் தெருக்களில் இரவு முழுக்க வீதியுலா முடித்தவுடன், அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிகும் கோவிலுக்கு வந்தடையும். நூல் சுற்றப்பட்ட மண் பானைகளை அம்மன் சன்னதிக்கு முதலில் எடுத்து செல்வர். அதன்பிறகு சாமியின் அருளை பெற்று வேலாயுதம், வாலாயுதம், சூலாயுதம் ஆகிய 3 ஆயுதங்களையும் அங்காளம்மன் சன்னதியில் பானை நுனியில் சுமார் ஒன்றரை மணி நேரம் நிற்கும் அழகு காட்சி நடைபெறும்.
மேலும் பிரம்பு நாட்சியார், சுடலை, மாரியம்மன் சாமிகளுக்கு முழு காப்பு சாத்தி பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் பிரம்புநாட்சியாருக்கு மஞ்ச எண்ணெய் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சிவராத்திரி அன்று காலையில் உதிக்கும் சூரியன் அம்மன் முகத்தில் நேரடியாக விழும். மற்ற நாட்களில் அம்மனின் பாதத்தில் மட்டுமே விழும் என்று ஊர் மக்களால் கூறப்படுகிறது. சிவராத்திரி இரவு இருந்த கூட்டத்தை விட மறுநாள் அதிகாலையில் வரும் பக்தர்களே அதிகம். அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அழகு காட்சியை பார்ப்பதற்கு வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அழகு பார்த்து அங்காளம்மன் அருளை பெறுவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Maha Shivaratri, Tenkasi