முகப்பு /தென்காசி /

செங்கோட்டைக்கு போனீங்கன்னா இந்த ஸ்பெஷல் உணவை சாப்பிட மறக்காதீங்க!

செங்கோட்டைக்கு போனீங்கன்னா இந்த ஸ்பெஷல் உணவை சாப்பிட மறக்காதீங்க!

X
செங்கோட்டை

செங்கோட்டை காஜா பூரி

Shenkottai Kaja Poori | செங்கோட்டையில் மட்டுமே கிடைக்கும் காஜா பூரி பற்றிய செய்திகுறிப்பு.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மட்டுமே கிடைக்கும் காஜா பூரி பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

வடை, பஜ்ஜி போன்று எளிதில் செய்ய முடியாது. இரண்டில் இருந்து 3 மணி நேரம் செலவு செய்து செய்யக்கூடிய ஒரு உணவு பொருள் தான் காஜா பூரி. பூரி மாதிரி நல்லா புஸ்ஸுன்னு ஜிலேபி மாதிரி நல்ல கலர்ஃபுல்லாவும் இந்த காஜா பூரி இருக்கும். பொதுவா இது எல்லா இடங்களிலும் கிடைக்காது. வெகு சில இடங்களில் மட்டும் தான் இன்றவும் காஜா பூரி செய்து விற்று வருகின்றனர்.

முக்கியமாக செங்கோட்டை பேருந்து நிலையத்தில் சுட சுட பொறித்த ஜீராவில் போட்ட காஜா பூரி அதிக அளவுல விற்பனை ஆகும். பொதுவாக, விசேஷ நாட்களில் சில வீடுகளில் காஜா பூரி செய்வது வழக்கமாக இருக்கும். காஜா பூரி செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. வெறும் மைதா மாவு, நெய் மற்றும் சர்க்கரை வைத்து தான் இது தயார் செய்கின்றனர்.

செங்கோட்டை காஜா பூரி

இதையும் படிங்க : 200 மாட்டுவண்டிகளில் குலதெய்வ கோவில் வழிபாட்டுக்கு செல்லும் 56 கிராம மக்கள்.. கமுதியில் பழமை மாறாத வழக்கம்..

மைதா மாவில் உருக்கிய நெய் சேர்த்து, கட்டி இல்லாமல் 8ல் இருந்து 10 நிமிடம் நல்ல மாவை பிசைஞ்சதுக்கு அப்புறம் சுருட்டி சுருட்டி காஜா பூரிக்குன்னு உண்டான அந்த ஷேப் வந்ததுக்கப்புறம் எண்ணெயில் போட்டு பொறித்து சர்க்கரை பாகுல ஊறவைத்து எடுத்தால் சுட சுட மொறு மொறுப்பான இனிப்பான காஜா பூரி தயார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதை தயாரிப்பதற்கு அதிக வேலை இருப்பதால் இதை அதிக இனிப்பகங்களில் செய்வதில்லை. இங்கு மட்டும் தான் இது இன்று வரை கிடைக்கிறது. நீங்கள் காஜா பூரி சாப்பிட்டு இருக்கீங்களா? செங்கோட்டை பக்கம் போனீங்கன்னா மறக்காம சாப்பிட்டு பாருங்கள்.

First published:

Tags: Food, Lifestyle, Local News, Tenkasi