முகப்பு /தென்காசி /

தென்காசியில் கடும் வெயில் எதிரொலி.. சேவல் கொண்டை பூ விளைச்சல் குறைவு..

தென்காசியில் கடும் வெயில் எதிரொலி.. சேவல் கொண்டை பூ விளைச்சல் குறைவு..

X
சேவல்

சேவல் கொண்டை பூ விளைச்சல் குறைவு

Seval Kondai Flower | வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தென்காசியில் சேவல் கொண்டை பூ வளர்ச்சி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வரும் வேளையில், சேவல் கொண்டை பூவின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. வாசம் இல்லை என்றாலும் மறுபடியும் முழுவதும் பயிரிடக்கூடிய ஒரு பூ வகை தான் இந்த சேவல் கொண்டை பூ. சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு என பல வண்ண நிறங்களில் பூக்கிறது.

சேவல் கொண்டை பூ விளைச்சல் குறைவு

இதனை வருடம் முழுவதும் பயிரிட முடியும். முதலில் நிலத்தை நன்கு உழவு செய்த பிறகு செடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். வெடி வளரும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். கரிசல் மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண்ணாக இருந்தால் வாரம் 2 தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாற்று செய்த 90ம் நாள் பூ பூக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை பூக்களை அறுவடை செய்யலாம்.

மேலும் இந்த பூவின் வளர்ச்சிக்கு மழை மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஏனெனில் வரப்பில் தண்ணீர் பாய்ச்ச பட்டாலும் பூக்களின் மேலே தண்ணீர் தெளிக்கப்பட்டால் மட்டுமே சேவல் கொண்டை பூ அதிக வளர்ச்சியை அடைய முடியும். தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தினால் இதன் விளைச்சல் சற்று குறைவாகவே இருக்கின்றது என்று தென்காசி மாவட்ட அழகு நாச்சியாபுரம் கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi