முகப்பு /செய்தி /தென்காசி / Video | நகர்மன்றத் தலைவி - அதிமுக பெண் கவுன்சிலர் மோதல்... ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..!

Video | நகர்மன்றத் தலைவி - அதிமுக பெண் கவுன்சிலர் மோதல்... ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..!

நகராட்சி கூட்டத்தில் மோதிக்கொண்ட நகர் மன்ற தலைவி மற்றும் அதிமுக பெண் கவுன்சிலர்

நகராட்சி கூட்டத்தில் மோதிக்கொண்ட நகர் மன்ற தலைவி மற்றும் அதிமுக பெண் கவுன்சிலர்

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற தலைவியும், அதிமுக பெண் கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் நகர திட்டக்குழு கூட்டம் நகராட்சி ஆணையர் ஜெயப்பிரியா தலைமையில் நகரமன்ற தலைவர் ராமலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ள சூழலில் நகர்மன்ற தலைவியாக உள்ள ராமலக்ஷ்மி என்பவர் சுயேட்சையாக வெற்றி பெற்று அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதரவுடன் கடும் போராட்டத்திற்க்கு பின்னர் சேர்மனாக பதவியேற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இந்த சம்பவம் செங்கோட்டை நகர பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நாள் முதல் இதுவரை நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும் கூட்டம் தொடங்கிய உடன் மெஜாரிட்டி இல்லாத ஒரு தலைவர் தற்போது உள்ளார் என கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

தொடர்ந்து, நகர மன்ற தலைவியின் அறைக்குள் சென்று அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பிரச்னையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக 3வது வார்டு கவுன்சிலரான சுடர்ஒளி என்பவரை செருப்பால் அடிப்பேன் என சேர்மன் கூறியதாக கூறப்படுகிறது.

top videos

    அதனைத்தொடர்ந்து, சேர்மன் மற்றும் 3-வது வார்டு கவுன்சிலர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற கூட்டத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    First published:

    Tags: Tenkasi, Viral News