முகப்பு /தென்காசி /

தென்காசி சுய உதவிக்குழு பெண்களுக்கு இதோ ஒரு அரிய வாய்ப்பு!..

தென்காசி சுய உதவிக்குழு பெண்களுக்கு இதோ ஒரு அரிய வாய்ப்பு!..

மாதிரி படம்

மாதிரி படம்

Thenkasi News | 2022 -2023-ம் நிதியாண்டில்- சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு மணிமேகலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர்  துரை.இரவிச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tenkasi, India

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும்,தகுதியான சுய உதவிக்குழுக்கள் சமுதாய அமைப்புகள் தங்கள் குழு செய்த சமூக நலன் சார்ந்த செயல்களை முன்னிலை படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 10.04.2023 முதல் 21.04.2023-க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi