ஹோம் /தென்காசி /

தென்காசியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தென்காசியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சிறப்பு முகாமில் மருத்துவ அட்டைகளை பெற்ற திருநங்கைகள்

சிறப்பு முகாமில் மருத்துவ அட்டைகளை பெற்ற திருநங்கைகள்

Tenkasi News : மூன்றாம் பாலினருக்கான நலத்திட்டங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  மருத்துவ காப்பீடு, வேலைவாய்ப்பு, வங்கி கடன் பெறுதல்,வீட்டுமனை பட்டா, 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு ஒய்வு ஊதியம் போன்ற நலத்திட்டங்கள் பெண் ஆண் என்ற இருபாலினர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளாகிய மூன்றாம் பாலினர்களுக்கு இது எதுவும் கிடைப்பதில்லை.

  மூன்றாம் பாலினர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இவர்களுக்கான மறுவாழ்விற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த குறைதீர்ப்பு முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

  நவம்பர் 22-ம் தேதி நடந்த சிறப்பு குறைதீர்ப்பு நாள்  முகாமில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. சுயவேலை வாய்ப்பு முகாம், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டை, இலவச வீட்டு மனை வழங்குவதற்கான பட்ட, புதிய வீட்டை விட்டு வந்த மூன்றாம் பாலினர்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்குதல், போன்ற நல திட்டங்கள் இதில் அடங்கும். இதில் 153 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

  இதையும் படிங்க:  தென்காசி புலியருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்..

  மேலும் இந்த முகாமில் 27 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மருத்துவ திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீட்டுமனைக்கான பட்டா உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் செய்து தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  செய்தியாளர் : சுப கோமதி ( தென்காசி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Tamil News, Tenkasi, Transgender