தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புவனேஸ்வரி என்பவர், தன் பாட்டியிடம் இருந்து நூலினால் தைக்கக்கூடிய ஆடைகள் மட்டும் பொம்மைகள் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது தனக்கென சொந்தமான ஒரு குரோசே தொழிலையும் தொடங்கி வெற்றிகரமாக லாபம் பார்த்து வருகிறார்.
மேலும் குரோசே தொழிலை 15 ரூபாயிலிருந்து தொடங்க முடியும் என்றும், நூலின் தரத்திற்கு ஏற்றார் போல் வாடிக்கையாளர்களுக்கு லாபம் வைத்து விற்பனை செய்யலாம் என்றார் புவனேஸ்வரி. பணி மற்றும் மழைக்காலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஸ்வட்டர் தான் முதலில் விற்பனை செய்ததாகவும், பிறகு அதனைப் பார்த்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெண்களும் தனது குழந்தைகளுக்கு இதனைப் போல கஷ்டமைஸ் செய்து தர வேண்டும் என்று கேட்டதால் தொடங்கப்பட்டதே இந்த கிரோசி பிசினஸ் என்கின்றார் புவனேஸ்வரி.
நூலினால் செய்யப்பட்ட பொம்மைகள், நிலைகளில் தொங்கவிடப்படும் அழகு பொருட்கள், கீ செயின், பிரிட்ஜ் மேக்னெட், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஸ்வட்டர், குல்லா, சாக்ஸ், ஷூ, அழகு பொம்மைகள், ஹேண்ட் பேக், பர்ஸ், என பல்வேறு நிறங்களில் பல்வேறு வகையான குரோசைகளையும் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றார் இந்த சங்கரன்கோவில் பெண்மணி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆரம்ப கட்டத்தில் 15 ரூபாய் நூலில் இருந்தே இந்த தொழிலை தொடங்கி, அதிக லாபம் பார்க்க முடியும் என்று தெரிவிக்கின்றார். ஒரு பொம்மையில் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையில் லாபம் பார்க்கலாம் என்றும் நம்பிக்கையேடு தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டும் செலவழித்து ஒரு மாதத்திற்கு பத்தாயிரம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்தார் புவனேஸ்வரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi