முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் தங்க மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்..

சங்கரன்கோவில் தங்க மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் தங்க மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்

Sankarankovil Thanga Mariamman Temple : சங்கரன்கோவில் - ராஜபாளையம் பிரதான சாலையில் தங்கமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

  • Last Updated :
  • tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தங்கமாரி அம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற பங்குனி திருவிழா பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில் -ராஜபாளையம் பிரதான சாலையில் தங்கமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. பங்குனி திருவிழாவை ஒட்டி கோவில் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்குழி இறங்குதலும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    முளைப்பாரி உடன் அம்மன் உருவச்சிலை, வேல், ஆகிய சிலைகளையும் காப்பு கட்டிய பக்தர்கள் சுமந்து ஊர்வலமாக சென்றனர். நள்ளிரவு 10.30 மணியளவில் தொடங்கிய பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தீச்சட்டி சுமந்து பக்தர்கள் ஊர்வலமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    First published:

    Tags: Local News, Tenkasi