முகப்பு /தென்காசி /

நுண்ணோக்கியில் பெரிதாக தெரிந்த நுண்ணுயிரிகள்.. ஆச்சர்யத்துடன் பார்த்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்..

நுண்ணோக்கியில் பெரிதாக தெரிந்த நுண்ணுயிரிகள்.. ஆச்சர்யத்துடன் பார்த்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்..

X
நுண்ணோக்கியை

நுண்ணோக்கியை ஆச்சர்யத்துடன் பார்த்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்

Tenkasi News : நுண்ணோக்கியில் பெரியதாக தெரிந்த நுண்ணுயிரிகள் ஆச்சரியத்துடன் பார்த்த சங்கரன்கோவில் பள்ளி மாணவர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

பொதுவாக தேசத் தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட சிறந்த இயற்பியல் மேதை சர்.சி.வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டார். இந்த நாளையே நாம் அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.

அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற சிறப்பு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. நுண்ணோக்கி மற்றும் பல அறிவியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வேதியியல் திரவங்கள் கொண்டு செய்முறை விளக்கம் ஆசிரியர்களால் செய்து காட்டப்பட்டது. அதை மாணவ, மாணவிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து கற்றுக்கொண்டனர்.

மேலும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்ட உயிரினங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தேசிய அறிவியல் தினத்தன்று மாணவ, மாணவிகள் இதனை கண்டுகளித்தனர். அதேபோல் நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி மூலம் மாணவர்கள் கண்டு களித்தனர். அப்போது அவை மிகவும் பெரிதாக தெரிந்ததால் ஆச்சரியப்பட்டனர். இதில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi