முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் வருஷாபிஷேகம்..! சப்பர வீதி உலா கோலாகலம்..!

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் வருஷாபிஷேகம்..! சப்பர வீதி உலா கோலாகலம்..!

X
சங்கரநாராயணர்

சங்கரநாராயணர் கோவிலில் வருஷாபிஷேகம்

Sankaranarayanar Temple Varushabhishegam : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் வருஷாபிஷேகத்தையொட்டி 5 சப்பர வீதி உலா நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 13வது வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சங்கரநாராயணர் கோவிலில் வருஷாபிஷேகம்

இந்த வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மதியம் 12 மணியளவில் வள்ளி, தேவ சேனா, சமேத சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து 7 மணிக்கு மேல் விநாயகர், ஆறுமுகர், சங்கரலிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சண்டிகேஸ்வரர் என 5 சப்பரங்களும் வரிசையாக எழுந்தருளி வீதி உலாவும் வந்தனர்.

மேலும், கோவில் ரதவிதியில் 5 சப்பரங்களும் ஒரு சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi