ஹோம் /தென்காசி /

கோவில் மணியை திருடிய கள்வனை கண்டுபிடித்த கல்லாலி சாமி.. பொங்கல் பண்டிகை மறுநாள் சங்கரன்கோவிலில் நடக்கும் சுவாரஸ்யம்..!

கோவில் மணியை திருடிய கள்வனை கண்டுபிடித்த கல்லாலி சாமி.. பொங்கல் பண்டிகை மறுநாள் சங்கரன்கோவிலில் நடக்கும் சுவாரஸ்யம்..!

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் கல்லாலி சாமி

Sanakarankovil poojai | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் திருடிய நபரை கையும், களவுமாக பிடித்ததால் சங்கரேஸ்வரர் சுவாமி கல்லாலி சாமி என பெயர் வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil) | Tenkasi

தென்காசியில் கோயில் மணியை திருடிய நபரை சாமி கண்டுபிடித்ததாக ஐதீகம்.

பொங்கல் பண்டிகை முடிந்த மறுநாள் சங்கரேஸ்வரர் மற்றும் சங்கரேஸ்வரர் சுவாமிகள் சங்கரநாராயணன் திருக்கோவிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளை ஏற்றனர்.

பூஜையின் போது கருப்பு உடையில் முகமூடிகள் அணிந்து வந்த ஒருவர் சுவாமியின் மணி மற்றும் செம்பை களவாடினான். திருடனை பிடிக்க சங்கரேஸ்வரர் குதிரை வாகனத்தில் வந்து அவனை கண்டுபிடித்ததாகவும் செவி வழி செய்திகள்.கள்வனை கண்டுபிடித்ததால் சங்கரேஸ்வரரை , கல்லாலி சாமி என்றும் கூறுவர்.

இதில், திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சங்கரேஸ்வரரை வழிபட்டனர் .

First published:

Tags: Local News, Pongal festival, Sankarankovil Constituency, Tenkasi