ஹோம் /தென்காசி /

உறியடி.. பலூன் உடைத்தல்.. சங்கரன்கோவிலில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

உறியடி.. பலூன் உடைத்தல்.. சங்கரன்கோவிலில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

X
Pongal

Pongal games 

Sankarankovil Pongal Games | சங்கரன்கோவில் சங்கர் நகர் பகுதியில் உள்ள மக்கள் அதிகாலை முதலே விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi | Sankarankoil (Sankarankovil)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

சங்கரன்கோவில் சங்கர் நகர் பகுதியில் உள்ள மக்கள் அதிகாலையில் இருந்தே இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பெண்களுக்கான கோலப்போட்டியில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொண்டனர். வண்ண வண்ண பொடிகளுடன் அழக அழகான கோலங்களை நேர்த்தியாக போட்டனர். இதை ஒரு நடுவர் அளவீடு செய்து சிறந்த கோலத்தை அறிவித்தார்.

ஸ்லோ சைக்கிள் ரேஸ், பாட்டிலில் நீர் இருப்பதால், பலூன் உடைத்தல், உரியடித்தல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றது. அதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இதற்கு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

”இதுபோன்ற நிகழ்சிகள் அக்கம் பக்கத்தினருடன் உறவை மேம்படுத்த உதவுவதோடு மன இறுக்கத்தையும் குறைக்க உதவுகிறது. அதேபோல் அவர்களுக்குள் இருக்கும் திறனை வெளிக்கொண்டு வருவதால் போட்டியாளர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது” என்றார் இந்த போட்டிகளின் ஏற்பாட்டாளர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal festival, Sankarankovil Constituency, Tenkasi