ஹோம் /தென்காசி /

சாக்கடைக்குள் விழுந்த மூதாட்டி.. சாலைமறியலில் ஈடுபட்ட சங்கரன்கோயில் பொதுமக்கள்!

சாக்கடைக்குள் விழுந்த மூதாட்டி.. சாலைமறியலில் ஈடுபட்ட சங்கரன்கோயில் பொதுமக்கள்!

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் மக்கள் போராட்டம்

Sankarankoil protest | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் இரண்டாம் தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட கழிவுநீர் சாக்கடைக்குள் மூதாட்டி தவறி விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil) | Tenkasi

சங்கரன்கோயிலில் கழிவுநீர் கால்வாயை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் இரண்டாம் தெருவில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அபாய நிலையில் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கும் நகராட்சி  நிர்வாகத்துக்கும் இடையேயான எல்லை பிரச்னையால் பொதுமக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

கோமதிபுரம் இரண்டாம் தெரு தான் சங்கரன்கோவில் இரண்டு வழி மெயின் சாலையையும், நீதாலயா தியேட்டர் சாலையையும் இணைக்கும் ஒரு பிரதான சாலையாகும். பாதாள சாக்கடை பணிகளுக்காக இந்த சாலை தோண்டப்பட்டு ஒரு வாரமாக மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது “இது நெடுஞ்சாலை துறை கீழ் வருவதால் இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாது ” என பதிலளித்தார்.

நகராட்சியா அல்லது நெடுஞ்சாலைத்துறையா என்ற பிரச்சனையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் சமீபத்தில் அந்த சாலை வழியாக சென்ற மூதாட்டி ஒருவர், மூடப்படாத கழிவுநீர் சாக்கடைக்குள் தவறி விழுந்தார். இதை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் உடனடியாக சாக்கடைக்குள் குதித்து மூதாட்டியை காப்பாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே நியூஸ் 18 உள்ளூர் செய்திகள் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்ககோரி கோமதிபுரம் இரண்டாம் தெரு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா, நகர செயலாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் மூடப்படாத பாதாள சாக்கடையைநேரில் பார்வையிட்டனர். இதனை உடனடியாக சரி செய்து தருகின்றோம் என்று உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கழிவு நீர் கால்வாய் சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

First published:

Tags: Local News, Sankarankovil Constituency, Tenkasi