ஹோம் /தென்காசி /

ஆருத்ரா தரிசனத்தை கண்டு மகிழ்ந்த சங்கரன்கோவில் மக்கள்.. சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழாவில் பரவசம்..

ஆருத்ரா தரிசனத்தை கண்டு மகிழ்ந்த சங்கரன்கோவில் மக்கள்.. சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழாவில் பரவசம்..

X
ஆருத்ரா

ஆருத்ரா தரிசனத்தை கண்டு மகிழ்ந்த சங்கரன்கோவில் மக்கள்..

Sankarankovil Arudhraa Darshan | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

திருவாதிரை நட்சத்திரம் என்பதை சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என குறிப்பிடப்படுகிறது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமியில் ஆனந்த நடனத்தை ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. நடேசன் நடராஜன் எனப்படும் நடனத்தில் வல்ல சிவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவித நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மார்கழி மாதம் அதிகாலை பொழுதில் சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜ பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவது ஐதீகம்.

அதனால், தேவர்கள் தெய்வ தரிசனம் செய்யும் அதிகாலை பொழுதில் தெய்வ தரிசனம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. திருவாதிரை அன்று சங்கர நாராயணர் கோவில் உள்ள நடராஜருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என்கிறோம். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் அதிகாலையில் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு சப்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் நடைபெறும்.

அதிகாலையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நாளில் இறைவனை நினைத்து விரதம் இருந்து அதிகாலை பொழுதில் அவரை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும். சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் சிறப்பு ஆனால் ஆருத்ரா தரிசனத்தன்று சிவனை பார்த்தாலே சிறப்பு என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Local News, Tenkasi