முகப்பு /தென்காசி /

"அழகென்ற சொல்லுக்கு முருகா" சங்கரன்கோவில் ஆறுமுகனுக்கு ஒரே நேரத்தில் ஆறு தீபாராதனை! ஒளியில் ஜொலித்த முருகன்!

"அழகென்ற சொல்லுக்கு முருகா" சங்கரன்கோவில் ஆறுமுகனுக்கு ஒரே நேரத்தில் ஆறு தீபாராதனை! ஒளியில் ஜொலித்த முருகன்!

X
முருகர்

முருகர்

Tenkasi | சங்கரநாராயணர் கோயிலில் அமைந்திருக்கும் முருகன் வள்ளி தெய்வானை சன்னதியில் முருகனின் ஆறு முகங்களுக்கும் ஆறு புறம் பெரிய ஆறு தீபங்களை வைத்து ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil) | Tenkasi

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணியனின் ஆறு முகத்திற்கும் ஆறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள  முருகன் வள்ளி தெய்வானை சன்னதியில் முருகனின் ஆறு முகங்களுக்கும் ஆறு புறம் பெரிய ஆறு தீபங்களை வைத்து ஒரே சமயத்தில் தீபாராதனை செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றனர். மேலும் தை மாதத்தில் வரும் கார்த்திகை மிக விமர்சையாக கொண்டாடப்படுவதால் தை கார்த்திகையின் போது நடைபெற்ற ஆறுமுகங்களுக்கும் ஆறு பெரிய தீபங்களை கொண்டு தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.

வண்ண மாலைகள் அணிந்து வள்ளி தேவசேனா சமேதரராய் அழகன் முருகன் எழுந்தருள, அறு முகங்களுக்கும் ஆறு தீப ஆராதனைகள் நடைபெற்ற இந்த காட்சியை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.

First published:

Tags: Local News, Murugan temple, Sankarankovil Constituency, Tenkasi