ஹோம் /தென்காசி /

பல ஆளுமைகளை உருவாக்கிய சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளியின் அவல நிலை..

பல ஆளுமைகளை உருவாக்கிய சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளியின் அவல நிலை..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Sankarankovil Govt School : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. சங்கரநாயனார் கோவில் பெயர் மருவி சங்கரன்கோயில் ஆனதற்கு இந்த பள்ளி கட்டிடத்தில் உள்ள பெயர் பலகைகள் ஓர் உதாரணம். இவ்வளவு பழமையான இந்த பள்ளி இந்த பள்ளி 1953ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்துள்ளது.

இதில் தற்போது 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பல பழமையான கட்டிடங்கள் ஸ்திரத்தன்மையோடு இருந்தாலும், 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும் கட்டிடம் மட்டும் விரிசல்கள் விழுந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செடிகள் கட்டிடத்தில் முளைத்ததால் கட்டிடத்தில் விரிசல் தொடர்ந்து ஆழமாகி கொண்டே செல்கிறது.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அரசின் சார்பில் அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றதாகவும், நிதி பற்றாக்குறையால் தற்போது இந்த சீரமைப்பு நடவடிக்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi