முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் முழு நேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

சங்கரன்கோவிலில் முழு நேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

நூலக அடிக்கல் நாட்டு விழா

நூலக அடிக்கல் நாட்டு விழா

Sankarankovil news | சங்கரன்கோவிலில் நடைபெற்ற முழு நேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி எம்பி பங்கேற்றார்.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழு நேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி எம்பி தனுஷ்குமார் ,வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைகுமார் முன்னிலை வகித்தனர் .இதில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டு நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவைதுவக்கி வைத்தார்.தொடர்ந்து நூலகத்தில் தன்னையும் ஒரு புரவலராகஇணைத்துக் கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Sankarankovil Constituency, Tenkasi