முகப்பு /தென்காசி /

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்.. சங்கரன்கோவில் பகுதியில் அவலம்..

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்.. சங்கரன்கோவில் பகுதியில் அவலம்..

X
குழாய்

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

Sankarankovil Breakage of Pipe Lines | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாலை விரிவாக்க பணி, 4 வழிச்சாலை என பல திட்டங்கள் நடத்தி முடிவு பெற்ற நிலையில் வந்தடைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, ஆங்காங்கே சாலையையொட்டி போடப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சங்கரன்கோவில் 4 வழிச்சாலை பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதண்ணீர் குழாயில்உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமாகி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என, நியூஸ் 18 உள்ளூர் செய்தியில் செய்தி பதிவிட்டும், இன்று வரை சாலை சீரமைப்பு பணிகள் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக சாலை தடுப்புகள் வைத்து சேதமான சாலையை அடைத்துள்ளனர். இதனால் மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தும்போது, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

மேலும் இந்த சேதமடைந்த சாலைகளல் கடந்த வாரத்தில் இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, சங்கரன்கோவிலின் பல பகுதிகளில் சாலைகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுகுறித்து சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சமீபத்தில் போட்டிருந்த வலைதள பதிவில் இது சங்கரன்கோவில் குடிநீர் பைப் லைன் அல்ல, இது ராஜபாளையத்திற்கு போகும் தண்ணீர் பைப் லைன். அதனால் நமது பகுதியில் வரும் தண்ணீருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அலட்சியமாக அழித்த பதிவைக், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் கோடை காலத்தில் தண்ணீர் வீணாவது கண்டிக்கத்தக்கது என்றும், அது எந்த ஊருக்கு செல்லும் பைப் லைனாக இருந்தாலும் சாலைகள் சேதம் மற்றும் தண்ணீர் கசிவால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் பாதுக்கப்படுவது சங்கரன்கோவில் மக்கள் தான் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi