முகப்பு /தென்காசி /

அசைவ பிரியர்கள் தேடி வரும் சங்கரன்கோவிலின் பழமையான சிவகாசி நாடார் மெஸ்ல சாப்பிட்டுருக்கீங்களா?

அசைவ பிரியர்கள் தேடி வரும் சங்கரன்கோவிலின் பழமையான சிவகாசி நாடார் மெஸ்ல சாப்பிட்டுருக்கீங்களா?

X
Sankarankovil

Sankarankovil best non-veg spot 

Sankarankovil Sivakasi Nadar Mess | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அசைவ பிரியர்களின் சொர்கலோகம் என்றால் அது இந்த சிவகாசி நாடார் மெஸ் தான் என்கின்றனர் உள்ளூர்காரர்கள்.

  • Last Updated :
  • Tenkasi, India

சங்கரன்கோவில், சங்கரநாராயணன் கோவில் அருகில் இருக்கும் விநாயகர் கோவில் தெருவில் தான் இருக்கிறது சிவகாசி நாடார் மெஸ். வெள்ளாட்டு மட்டன் பிரியாணி, மட்டன் நெய் சுக்கா, வஞ்சிரம் மீன், ஊழி மீன், இறால், கொடல் ரோஸ்ட், காடை, நல்லி, சிக்கன் என நான் வெஜ் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அனைத்தம் சங்கரன்கோவிலில் இருக்கிற சிவகாசி நாடார் மெஸ்ல கிடைக்கும். மூன்று தலைமுறைகளாக இருக்கும் கடை தான் இந்த சிவகாசி நாடார் மெஸ்.

1941 தன் தாத்தா தொடங்கிய கடையை தற்போது நடத்தி வருபவர் தங்க ரத்தினம்.80 வருடங்களை கடந்த பாரம்பரியமான கடை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த கடையின் அமைப்பு ஒரு மூணு பத்தி வீடு மாதிரி தான் இருக்கு முதல் பத்தியில ரத்தினத்தின் மகள் விறுவிறுப்பான ஞாயிற்றுக்கிழமையில் பரபரப்பா கணக்கு போட்டு கல்லாப்பெட்டியில காசு வாங்கி போட்டுட்டு இருக்காங்க.

சங்கரன்கோவில் : சிவகாசி நாடார் மெஸ்

இரண்டாவது பத்தி சாப்பிடுவதற்காகவும், மூணாவது பத்தியில அங்குள்ள எல்லா வகையான குழம்புகளையும் அடுக்கி வச்சிருந்தாங்க அதற்கு பின்னாடி மீன் பொரிக்கிறது என்று எல்லா சமையல் வேலைகளும் விறுவிறுப்பா நடந்துட்டு இருந்துச்சு.

வார கடைசியில் இந்த கடையில கூட்டம் அதிகமாவே இருந்துச்சு. உள்ளூர விட வெளியூர் மக்கள் நிறைய பேரு இந்த கடையில் வந்து சாப்பிட்டு போறாங்க.

சங்கரன்கோவில் : சிவகாசி நாடார் மெஸ்

மேலும் நல்லி எலும்பு, இறால், நெய் சுக்கா, சீரக சம்பா பிரியாணி எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டு, சாதத்துல கட்டியான தயிரையும் குடுக்குறாங்க. அது இவங்க கடையோட தனித்துவம்னு சொல்றாங்க.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Food, Local News, Non Vegetarian, Tenkasi