தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகருக்கு 6 பெரிய தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருளை பெற்றனர். அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற வாசகத்திற்கு ஏற்ப பூமாலைகளாலும் ஆபரணங்களாலுடன் முருகன் அருள்மிகுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் ஸ்ரீஆறுமுகநயினார் வள்ளி தெய்வானையுடன் ரதவீதி உலாவும் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.
மேலும் பழனி மலையில் முருகன் ஆண்டியாக அமர்ந்திருக்கும்போது சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.தைப்பூசத்தை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் ஸ்ரீ ஆறுமுகநயினார் வள்ளி தெய்வானையுடன் ரதவீதி உலாவும் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi