ஹோம் /தென்காசி /

ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றி சங்கரன்கோயில் நகராட்சி நிர்வாகம் அதிரடி..

ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றி சங்கரன்கோயில் நகராட்சி நிர்வாகம் அதிரடி..

X
அகற்றப்பட்ட

அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்

Tenkasi News : சங்கரன் கோவிலில் சாலை விரிவாக்க பணிக்காக ரத வீதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சாலையோர கடைகளை சங்கரன்கோவில் நகராட்சி சார்பாக ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருவழி சாலை பணிகள் நடந்து வருகிறது. சங்கரன்கோவிலில் வடக்கு ராதை வீதி மிக முக்கிய சாலைகளில் ஒன்று. மேலும் தென்காசி சுரண்டையில் இருந்து வரும் பேருந்துகள் வரும் பிரதான சாலையாக வடக்கு ரத வீதி சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. கடைகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தாவரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

சங்கரநாராயணர் திருக்கோவிலை சுற்றியுள்ள வடக்கு ரத வீதியில் இருந்து மேல ரத வீதி வரை சாலை விரிவாக்கம்செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக ஜேசிபி மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை இடித்தனர்.

இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

வடக்கு ரத வீதியில் வாறுங்காலுக்கு முன்னாள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி கொண்டு அகற்றினர். மேலும் வாறுங்கால் பணிகள் முடிவடைந்த பின்னரே சாலை சீரமைத்து போடப்படும் என்று நகராட்சி சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

செய்தியாளர் : சுபா கோமதி  -தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi