முகப்பு /தென்காசி /

கருப்பு கவுனில் தலையில் தொப்பியுடன் ஒய்யார நடை போட்ட குட்டீஸ்.. சுவாரஸ்யமான பட்டமளிப்பு விழா!

கருப்பு கவுனில் தலையில் தொப்பியுடன் ஒய்யார நடை போட்ட குட்டீஸ்.. சுவாரஸ்யமான பட்டமளிப்பு விழா!

X
பட்டமளிப்பு

பட்டமளிப்பு விழா

Tenkasi News | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் மழலையர் பள்ளியில், பயின்று வரும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

பொதுவாக நாம் 12 ஆம் வகுப்பு முடித்து அதற்கு மேல் ஒரு டிகிரி முடித்தால் தான் நமக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் ஆனால் தற்போது மழலையர்கள் ஒன்றாம் வகுப்பு செல்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு பட்டமளிப்பு விழா எடுக்கின்றனர் ஆசிரியர்கள். கருப்பு கவுனில் தலையில் தொப்பி அணிந்து பட்டமளிப்பு விழாவில் கம்பீரமாக குட்டீஸ் கலந்து கொண்ட விதம் பார்க்க ரசிக்க வைக்கும் படியாக இருந்தது.

மேலும் குழந்தைகள் உற்சாகப்படுத்தும் விதத்தில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஸ்டேஜ் மேல குழந்தைகள் ஆட அவர்களுக்கு கீழ இருந்து படி ஆடி நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆசிரியர்கள் தான் மற்றொரு செண்டர் ஆப் அட்ரேக்‌ஷன்.

மேலும் குத்து விளக்கு ஏற்றி பட்டமளிப்பு விழா தொடங்கியபோது குழந்தைகள் ஆசிரியர்களுடன் ரெட் கார்பெட் ல் நடந்து கெத்தாக entry கொடுத்தனர். பிள்ளைகளை இப்போதே கருப்பு கவுனில் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர் இந்த பிள்ளைகளின் பெற்றோர்கள்.

மேலும் குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பள்ளியின் கரஸ்பாண்டன்ட் மற்றும் தலைமை ஆசிரியர் பட்டங்களை வழங்கினார். சில குழந்தைகள் சிரித்த முகத்துடன் சில குழந்தைகள் நம்மை பொற்றோரிடம் எப்போது அனுப்புவார்கள் என்ற மைண்ட் வாயிஸில் ஏக்கத்தோடு பட்டங்களை வாங்கினர்.

First published:

Tags: Graduation, Local News, Tenkasi