முகப்பு /தென்காசி /

காலையில் ஆய்வு.. மாலையில் தீர்வு - தென்காசி எம்.எல்.ஏவின் உடனடி ஆக்‌ஷன்.. அரசு பள்ளி மாணவர்கள் ஹேப்பி..

காலையில் ஆய்வு.. மாலையில் தீர்வு - தென்காசி எம்.எல்.ஏவின் உடனடி ஆக்‌ஷன்.. அரசு பள்ளி மாணவர்கள் ஹேப்பி..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Tenkasi MLA | சங்கரன்கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் மைதானத்தை விட கோமதி அம்பாள் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் மைதானம் மிகவும் பெரியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இந்த பள்ளியில் சங்கரன்கோவில் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள்பலரும் இந்த பள்ளியிலேயே பயின்று வருகின்றனர். பல அரசு அதிகாரிகளையும் இந்த பள்ளி உருவாக்கி உள்ளது. மேலும் சங்கரன்கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் மைதானத்தை விட கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் மைதானம் மிகவும் பெரியது.

இது இப்பகுதி மக்கள் பலரும் பயன்படுத்தும் மைதானமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா காலையில் இந்த பள்ளியில் ஆய்வு செய்த நிலையில், மைதானத்தை சுத்தப்படுத்தி தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உடனடியாக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு புற்களை அகற்றி சமப்படுத்தப்பட்டது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi