ஹோம் /தென்காசி /

லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா? சங்கரன்கோவில் பொருட்காட்சியில் மக்களை கவர புதுமுயற்சி..

லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா? சங்கரன்கோவில் பொருட்காட்சியில் மக்களை கவர புதுமுயற்சி..

X
லிக்யூட்

லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட்

Liquid Nitrogen Biscuit : சங்கரன்கோவிலில் நடைபெறும் பொருட்காட்சியில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட்டை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். வாயில் புகைகளை விட்டுக்கொண்டு ஸ்லோ மோஷன் வீடியோக்களை இணையதளங்களில் அதிகமாகபார்த்திருப்போம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போடப்பட்டிருந்த பொருட்காட்சியில் 30 ரூபாய்க்கு நைட்ரஜன் பிஸ்கட்கள் விற்க்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்காட்சி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓரியோ பிஸ்கட்டை நைட்ரஜனில் ஊற்றி அதனை வாயில் போட்டால் புகைகள் வந்தபடி சாப்பிடுவதற்கு ஒரு குளிரான அனுபவத்தை கொடுக்கும்.

மேலும் வாயிற்குள் போட்டவுடன் குளிரின் காரணமாக வாயிலிருந்து புகை வரும். இதனை இளைஞர்கள் பெரிதும் விரும்பி சாப்பிட்டனர். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்துதங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டனர். இந்த டைனோசர் பொருட்காட்சி சங்கரன்கோவில் நகராட்சி காலனி கழுகுமலை ரோட்டில் அமைந்திருக்கிறது. சங்கரன்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் மக்கள் இங்கு இன்னும் செல்லவில்லை என்றால் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் சென்று விட்டு வாருங்கள். இந்த பொருட்காட்சி காலை 10 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரைக்கும் திறந்திருக்கும். குழந்தைகளோடு இதற்கு ஒரு விசிட் செய்து வாருங்கள்.

முகவரி : காவேரி நகர், நகராட்சி காலனி, கழுகுமலை சாலை சங்கரன்கோவில்.

First published:

Tags: Local News, Tenkasi