ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாதிரை திருவிழா..

சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாதிரை திருவிழா..

X
சங்கரநாராயணன்

சங்கரநாராயணன் கோவில்

Sankarankovil Sankaranarayanan Temple | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவிலூர் திருவாதிரை திருவிழாவின் கொடியேற்றதுடன்  தொடங்கியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரநாராயணன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். திருவாதிரை பூஜையின் ஆரம்பமாக சங்கர நாராயணன் திருக்கோவிலில் இருக்கும் கொடி மரத்திற்கு அதிகாலையில் தீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரநாராயணன் திருக்கோவிலானது தென்பகுதிகளில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று. மற்ற எந்த கோவில்களிலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த சங்கரநாராயணன் திருக்கோவிலுக்கு உண்டு. இங்கு கோவிலில் ஹரியும் சிவனும் ஒரே சிலையில் இருப்பது மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

மேலும் இந்த கோவிலில் அமைந்திருக்கும் கோமதி அம்பாளுக்கு ஆடி மாதம் நடக்கும் ஆடித்தபசும் மிக விமர்சையாக நடைபெறும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில்பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். மேலும் கோவில்களில் இருக்கும் அம்பாள் மற்றும் சுவாமி வீதி உலா வருவதும் மிக சிறப்பு வாய்ந்தது.

இதையும் படிங்க : பெற்றோர் கண்முன் குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட 4 வயது பெண் குழந்தை... மீட்கப்பட்டது எப்படி..?

மேலும் சங்கரநாராயணன் திருக்கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். திருவாதிரை பத்தாம் நாள் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக நடைபெறும். நடராஜருக்கு சிறப்பு ஆராதனைகளும் தாண்டவ பூஜையும் நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனைகள் செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi