முகப்பு /தென்காசி /

மின் கம்பத்தின் மீது வேரோடு விழுந்த மரம்... மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு...

மின் கம்பத்தின் மீது வேரோடு விழுந்த மரம்... மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு...

X
Tree

Tree fall down 

Thenkasi News | தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

சங்கரன்கோவில் பகுதியில் பெய்த மழையால் வேரோடு சாய்ந்த மரத்தை உடனடியாக அகற்றி மின் இணைப்பை வழங்கிய ஊழியர்களை பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதேபோல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ராஜபாளையம் சாலையில் இருக்கும் நூற்றாண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மேலும் அந்த மரம் மின் கம்பத்தின் மேல் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் மின்சார கம்பத்தை சரி செய்து மீண்டும் மின்சார இணைப்பை வழங்கினர். மழையையும் பொருட்படுத்தாது ஊழியர்கள் துரிதமாக செயல்பாட்டை கண்டு பொதுமக்கள் பாராட்டினை தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi