முகப்பு /தென்காசி /

80 வருடமாக ஒரே குடும்பம் பூஜை செய்யும் கோயில்... தென்காசியில் எங்கு உள்ளது?

80 வருடமாக ஒரே குடும்பம் பூஜை செய்யும் கோயில்... தென்காசியில் எங்கு உள்ளது?

X
தென்காசி

தென்காசி

Tenkasi District News : சைவ, வைணவ வழிபாடு சிறப்பாக செய்யப்படும் மார்கழி மாதம்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

மார்கழி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது வண்ணக்கோலங்கள் மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் காலை கோயில் பூஜையும் தான். வைணவ வழிபாடு மட்டுமல்லாமல், இந்த மாதத்தில் சைவ வழிபாடும் சிறப்பாக செய்யப்படுகிறது.

இந்த மாதம் முழுவதும் இறைவனையும், இயற்கையையும் வணங்கும் மாதமாக கூறப்படுகிறது. தேவர்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம். இந்த மாதத்தில் ஆலயம் சென்று வழிபட்டால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி முதல் நாளில் பல கோயில்களில் பல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரத்தில் அதிகாலையிலேயே அங்குள்ள விநாயகர் ஆலயத்தில் பூஜைகள் தொடங்கின.

இதையும் படிங்க : தென்காசி : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகிறது.. 

80 வருடமாக தொடர்ந்து ஒரே குடும்பம் மார்கழி மாத முதல் நாள் பூஜையை நடத்தி வருகிறது. பூஜை செய்யும் குடும்பத்தினரிடம் கேட்டபோது ”மார்கழி மாதம் முதல் முதல் நாள் எங்களது பூஜை தான் இந்த கோயிலில் நடக்கும். இது என் தாத்தா காலத்தில் இருந்து நடந்து வருகிறது சுமார் 80 வருடமாக நாங்கள் தான் இதை செய்து வருகிறோம்.

அதிகாலை பூஜை முடிந்தவுடன் பிரசாதமாக சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை ஆகியவை எங்கள் வீட்டில் இருப்பவர்களே தயார் செய்து அதனை நாங்கள் பிரசாதமாககோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்போம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் 2023ம் ஆண்டு வரவிருப்பதால் புதிய காலண்டர்கள் முதலில் பிள்ளையாருக்கு படைத்த பின்னர் அனைவருக்கும் வழங்குவோம் இதை நாங்கள் 80 வருடமாக செய்து வருகிறோம்” என்று கூறினார்.

தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

First published:

Tags: Local News, Tenkasi