முகப்பு /தென்காசி /

சபரிமலை சீசன்... குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..

சபரிமலை சீசன்... குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

Tenkasi District News : கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குற்றாலத்தில் குளித்து வருகின்றனர். அருவிகளில் குளிக்க அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குற்றாலத்தில் குளித்து வருகின்றனர். அருவிகளில் குளிக்க அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அழகாக அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் பொதுவாக ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் நேரமாக இருக்கும். மழை காலங்களில் கடும் வெல்ல பெருக்கும் இருக்கும்.

எனவே அப்போது குளிக்க தடை இருக்கும். அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் முன்பு குற்றாலம் வழியாக வந்து புனித நீராடி செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க : கேரளாவில் கொள்ளை அரசுப்பேருந்தில் எஸ்கேப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா - எல்லையில் மடக்கி பிடித்த தமிழக போலீஸ்

குற்றாலத்தில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்

இதனால் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது ஐயப்ப சீசன் ஆரம்பம்பாகி விட்டதால் பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்திலும் மெயின் அருவியில் வந்து குளித்து செல்கின்றனர்.

இதையும் படிங்க : தென்காசி புலியருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்..

ஆனாலும், குற்றாலம் அருவிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என ஐயப்ப பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குற்றாலம் அருவியில் குளிக்க வரும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

குற்றாலத்தில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்

அருவி பகுதிகளில் கழிப்பிட வசதிகளும் முறையாக இல்லை எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் கூடுதல் மின்விளக்கு வசதி மற்றும் காவல்துறை பாதுகாப்புத் தேவை என தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஐயப்ப சீசன் காலங்களில் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கையாக இருக்கிறது.

top videos

    தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

    First published:

    Tags: Local News, Tenkasi