முகப்பு /தென்காசி /

உடல் எடையை குறைக்க ரெட் டீ குடிங்க.. சங்கரன்கோவிலில் விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை!

உடல் எடையை குறைக்க ரெட் டீ குடிங்க.. சங்கரன்கோவிலில் விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை!

X
உடல்

உடல் எடையை குறைக்க ரெட் டீ குடிங்க

Red Tea : உடல் எடையை குறைக்கும் ரெட் டீ சங்கரன்கோவிலில் விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தமிழ்நாட்டில் ஆங்காங்கே காய்ச்சல் பரவிவரும் செய்திகளை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு அரசு ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், மார்ச் மாதம் திடீரென மழையும் பெய்கிறது. இதனால், கிளைமேட் மாறி மாறி உடலுக்கு தொல்லை கொடுக்கிறது. எனவே, ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்த பாணங்களை குடிப்பதை மக்கள் விரும்புகின்றனர். அதன்படி, பல்வேறு வகையான டீ நமக்கு கிடைக்கிறது.

உடல் எடையை குறைக்கும் ரெட் டீ

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது கஃபே ஸ்கொயர் (Cafe Square), இங்கே ரெட் டீ என்று சொல்ல கூடிய காய்ந்த செம்பருத்தி பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹைபிஸ்கஸ் டீ (Hibiscus tea) கிடைக்கிறது. ரெட் டீ என்று சொன்னவுடன் ரெட் கலர் ஈசன் சேர்ப்பார்கள் என்று நினைத்து விடக்கூடாது. ஆக இவர்கள் உலர வைத்த ஹைபிஸ்கஸ் இலைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க  : குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

இங்கே, முதலில் தண்ணீர் கொதித்தவுடன் சர்க்கரை, நன்கு கொதித்து வரும் பொழுது உலர வைத்த ஹைபிஸ்கஸ் களின் இலைகளை போட்டுக் கொள்கின்றனர். அது நன்கு கொதித்த பின்பு வடிகட்டி சுட சுட பரிமாறுகின்றனர். மேலும் அதனுள் ஒரு ஹைபிஸ்கஸ் இன் காய்ந்த இலையை போடுவதன் மூலம் அதன் ருசியை இன்னும் அதிகப்படுத்துகிறது. இதனை 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதில் பல வகையான ஆரோக்கியமான சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன.

Cafe Square

வெயிலும் மழையும் மாறி மாறி தாக்கும் இந்த மார்ச் மாதத்தில் உடலின் ஆரோக்கியத்தை காக்க இந்த டீ குடித்தால் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் இங்கே டீ பருகும் வாடிக்கையாளர்கள்.ஆரோக்கியம் காக்க ஒரு ஹைபிஸ்கஸ் டீ குடிக்கலாமே!

First published:

Tags: Health, Lifestyle, Local News, Tenkasi