ஹோம் /தென்காசி /

செங்கோட்டையில் வெறிநாய் தடுப்பூசி முகாம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

செங்கோட்டையில் வெறிநாய் தடுப்பூசி முகாம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

X
தென்காசி

தென்காசி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Tenkasi awareness rally | தென்காசி மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கோட்டையில்  நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

வெறிநாய் கடிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தென்காசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கோட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி மாணவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

விழிப்புணர்வை தொடர்ந்து பள்ளி மாணவிகள் மற்றும் என் எஸ் எஸ் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. பேருந்து நிலையம் வழியாக கால்நடை மருத்துவமனை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த முகாம் தென்காசி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi