முகப்பு /தென்காசி /

மலை அடிவாரத்தில் உள்ள அனுமந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி சிறப்பு பூஜை

மலை அடிவாரத்தில் உள்ள அனுமந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி சிறப்பு பூஜை

X
அனுமந்தபுரி

அனுமந்தபுரி ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில்

Thenkasi News | தென்காசி மாவட்டம் அனுமந்தபுரியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. 

  • Last Updated :
  • Tenkasi, India

விஷ்ணுவின் அவதாரமான பகவான் ஸ்ரீ ராமர், பிறந்த நாளானது ‘ராமநவமி’ ஆக நாடு முழுவதும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ராம நவமியை முன்னிட்டு இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ராம பக்தரான ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் வன்னிக்கோனேந்தல் மற்றும் ஊத்துமலை கிராமங்களின் மலை அடிவாரத்தில் அனுமந்தபுரி என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கும் நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளதால் இந்த கோயிலின் எதிரே சில வருடங்களுக்கு முன்னர் ராமர், சீதை சிலைகள்  வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

அனுமந்தபுரி ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில்

top videos

    இந்த ராமர் சிலைக்கு பயன்படுத்திய மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது மேலும் சிறப்பாகும். ராம நவமிக்கு இந்த இரண்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi