தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த கீழப்பவர் கிராமத்தில் இயற்கை விவசாயி மாரியப்பன் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.
இயற்கை விவசாயம் செய்வதில் ஏற்படும் சவால்கள் பற்றி கேட்டபோது அவர் கூறியவை "முள்ளங்கி இயற்கையாக விவசாயம் செய்வதற்கு முள்ளங்கி விதையை ஊனி, பாத்தி போட்டு, தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். செடி வளர்ந்த 38 நாட்களில் இருந்து 60 நாட்களில் அறுவடை செய்யலாம். பாத்தி எடுக்காமல் விட்டுவிட்டால் தண்ணீர் பாய்ச்சும் போது விதைகள் ஒரே இடத்தில் அடித்துச் சென்றுவிடும். இதனால் இடப்பற்றாக்குறை காரணமாக விளைச்சல் சரியாக இருக்காது.
முள்ளங்கி வளர்ப்பிற்கு ஐந்து நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் மழை அதிகம் இருந்தால் தண்ணீர் பாய்ச்ச தேவையிருக்காது, கோடை காலத்தில் தவறாமல் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
வேரில் வளர்ந்த முள்ளங்கி மேலே வளர்ந்து இருக்கும் கீரையாகவும் இரண்டையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். முள்ளங்கியை 38 ஆவது நாளில் அறுவடை செய்வது சிறந்தது, அதற்கு மேல் அறுவடை செய்தால் காய் முற்றிவிடும். 60 நாளாகியும் முள்ளங்கியை அறுவடை செய்யாவிட்டால் பூ பூத்து விடும் அதனால் எந்த பயனும் இருக்காது. அதை சமைக்கும் போது அவ்வளவு சுவை இருக்காது.
முள்ளங்கியின் மேல் பகுதியில் இருக்கும் கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் இருக்காது கண்ணிற்கும் உடம்பிற்கும் குளிர்ச்சி ஏற்படும். 60 நாள் விளைச்சலுக்கு பிறகு ஒரு மாத காலம் நிலத்தை தரிசாக விட வேண்டும் அதன் பிறகு அது உழவுக்கு ஏற்றதாக அமையும்.
விலையை பொறுத்தவரை மூன்று முள்ளங்கிகள் இருக்கும் ஒரு கட்டுக்கு ஐந்து ரூபாய் விகிதத்தில் தான் வியாபாரிகள் தருகின்றனர்.
அதனை வாங்கும் வியாபாரிகள் ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை அதிகமாக வைத்து 15 இல் இருந்து அவர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் விற்று வருகின்றனர். இதில் செயற்கை உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையை நம்பி விவசாயம் செய்கிறோம்.
வெறும் எரு மட்டுமே உரமாக பயன்படுத்துகிறோம். ஒரு லாரி எருவுக்கு 3000 வீதம் செலவாகிறது. இதில் லாபம் என்றால் பெரிதளவில் எதுவும் கிடைப்பதில்லை ஆனால் விவசாயத்தை விடக்கூடாது என்பதற்காகவே இதை செய்து வருகிறோம்” என்று மாரியப்பன் கூறியுள்ளார்.
செய்தியாளர்: சுபா கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Radish benefits, Tenkasi