தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவிலில் இருக்கும் பூலி தேவர் அறையில் தான் புலித்தேவர் வந்து மறைந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பூலி தேவர் அறை சிவன் சன்னதிக்கும் சங்கரநாராயணன் சன்னதிக்கும் நடுவே அமைந்திருக்கிறது.
இந்த பூலி தேவர் அறையானது நேர்த்தியான மரங்களினால் கட்டப்பட்டது. பூலித்தேவர் இந்திய சுதந்திர விடுதலைப் போரில்சுதந்திர முழக்கத்தை எழுப்பிய மாவீரன் ஆவார். சங்கரன் கோவிலில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நெல் கட்டும் சேவல் ஊரை ஆண்ட மன்னன் தான் பூலி தேவர்.
ஆங்கிலேயோர் பூலி தேவரை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதற்காக சூழ்ச்சி செய்து பூலித்தேவரை கைது செய்தனர்.
கைது செய்த பூலி தேவரை சங்கரன்கோவில் வழியாக கொண்டு சென்ற போது சங்கரநாராயணன் திருக்கோவிலில் வணங்க வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் கேட்டார். பலத்த பாதுகாப்புடன் ஆங்கிலேயர் பூலி தேவரை கோவிலுக்குள் அனுமதித்தனர்.
கோமதி அம்மனை வணங்கியபடியே மறைந்து விட்டார் என்று நம்பப்படுகிறது அவரின் நினைவாக சங்கரநாராயணன் திருக்கோவிலில் பூலித்தேவர் அறை வைக்கப்பட்டுள்ளது. இதில் பூலித்தேவரின் ஓவியமும் இடம்பெற்று இருக்கிறது.
பூலித்தேவர் அறையில் இருக்கும் பலகையில் எழுதப்பட்டுள்ள செய்தி, “இந்திய விடுதலைப்போரின் முதல் சுதந்திர முழக்கம் செய்த மாவீரன் நெல்கட்டும்செவல் மன்னர் பூலித்தேவர் வீர வரலாறு, திருநெல்வேலி ஜில்லா சங்கரன்கோவில் தானுகா நெல்கட்டும் செவல் ரோமத்தில் 1715 ஆவணி திங்கள் 5ம் நாள் பூலித்தேவர் பிறந்தார்.
'தகப்பனார் பெயர்: சித்திரபுத்திரதேவர் - தாயார்: சிவஞாள நாச்சியார் - மனைவி: கயல்கண்ணி என்ற லெட்சுமி நாச்சியார் - மக்கள் : சிவஞான்பாண்டியன். சித்திரபுத்ரன்,
கோமதிமுத்துத்தலைவச்சி 1726ல் மவனராகப் பூலித்தேவர் முடிசூட்டப்பட்டார். மொகலாய பேரரசர் காலத்தில் 1600ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்த வெள்ளையர்கள் இந்தியாவில் வேர் ஊான்ற அடிகோலி தங்களை பாதுகாத்துக் கொள்ள: பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இந்திய அரசர்களை தாக்க ஆரம்பித்தார்கள்.
1741- பிரஞ்சுக்காரர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நாடு பிடிக்கும் ஆசையில் நம்நாட்டில் போராட்டம் நடைபெறாது. திருநெல்வேலிக்கு வந் முதல் வெள்ளைக்காரன் இன்னீஸ்துரை அந்த நேரம் ஆற்காடு நவாபாக இருந்த முவரது அலிக்கு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மறவர் பாளையங்கள் வரிப்பணம் செலுத்தாமலே இருந்தனர்.
மதுரையை கைப்பற்ற பூலித்தேவர் திட்டமிட்டதை அறிந்த நவாப் பாதுகாப்புக்காக கிழக்கிந்தியக் கம்பெனியுடன்ஓர் ஒப்பந்தம் கப்பம் தவிக்கும் உரிமை வெள்ளையர்களுக்கு கை மாறியது.
1755 மே திங்களில் இந்தியாவிலேயே முதன் முதல் படையுடன் காவில் கெரான் பூலித்தேவரின் நெல்கட்டும் சொல் கோட்டையைத் தாக்கினான். மாவீரன் பூலித்தேவர் வென்றார்.
இதுவே இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம் ஆங்கிலேயர் நவாப் போன்ற மாற்றம் அதிகாரம் தமிழ் மண்ணிலே காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் வாழ்நாளெல்லாம் போராடிய நாட்டுப்பற்றாளர் ஆறடிக்கு மேற்பட்ட நெடிய தோற்றமும் வைரம் போன்ற உடலூமும் உயர்ந்த அரசியல் நுண்ணறிவும், போர்ஹ்னும் குறிப்பாக குதிரை மீதிலிருந்து போர் புரிவுதில் மிகச்சிறந்த பேராற்றலும் உடையவர் நேர்மையும் நற்பண்புகளும் பிரம்பப் பெற்றவர்.
மன்னர் பூலித்தேவர் பல ஆலயங்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார். சங்கரன்கோவில் பாம்பாட்டி சித்தர் ஆலயத்தின் அருகிலுள்ள தெப்பக்குளம் இவரால் வெட்டப்பட்டது. வலம்வந்தநல்லூர் கோவிலின் முன் மண்டபத்தையும் மதுரை சொக்கநாதர் ஆயைமும், வாசுதேவநல்லூர் ஆலயமும், திருநெல்வேலி முதலிய ஆலயங்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் பூவித்தேவருடன் நேருக்குநேர் யுத்தம் செய்து வெல்லமுடியாது என்று எண்ணி சூழ்ச்சியாக கொல்ல திட்டமிட்டனர். பூலித்தேவரின் உதவியை பலதடவை பெற்ற ஆரணிக்கோட்டையின் தலைவன் அனந்தநாராயணள் வெள்ளையரின் கையாளாகி பூலித்தேவருக்கு கடிதம் எழுதி ஆங்கிலேயருக்கு எதிராக ஓர் ஆப்புத சாலை உருவாக்கியுள்ளேன்.
அந்த ஆயுத சாலையை திறந்து வைத்து பார்வையிட வேண்டுமென வஞ்சகமாகக் கேட்டுக் கொண்டாள். வஞ்சகமறிய பூலித்தேவர் உண்மை என நம்பிச் சென்றார். கும்பனியார் சூழ்ச்சிட்டடி மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்புக்கூண்டுக்குள் அடைத்தனர்.
பின் ஆங்கிலேயர்கள். வித்தேவரை பாளையங்கோட்டை சிறைக்கு கை விலங்கு கால்விலங்ரிட்டு அழைத்து சென்றனார். சாங்கரன்கோவில் வந்த போது நாள் வணங்கும்தெய்வமாகிய ஆவுடைநார்சியாரை வணங்கவேண்டுமென கும்பனியாரைக் கேட்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பதை பாதுகாவனுடன் சாங்கர நயினார் கோவிலுக்குள் அனுமதித்தளார்.
இறைவணக்கத்தின்போது 'அகப்பை கிணத்து தண்னியை அனுபவித்தேன் சிலகாலம் உப்பு கிணத்து நண்ணி உதவலியே ஆவுடைநாச்ரியாலே' என்று உள்ளமுருக கோமதிஅம்பாளை பாடிய உடனேயே விலங்குகள் நொறுங்க பூலித்தேவர் மறைந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிணத்து நண்ணி உதவலியே ஆவுடைநாச்ரியாலே' என்று உள்ளமுருக கோமதிஅம்டாளை பாடிய உடனேயே விலங்குகள் நொறுங்க பூலித்தேவர் மறைந்தார்.
கும்பினியார் அமரபட்சம் குருவாரம் தன்னில் குணமடைய பூசம் நட்சத்திர நாளில் பேர்புகழும் சங்கரன் கோவிலாலயத்தில் பிரபலமாகி லிங்கஜோதி தன்னுள் பார்புகழும் தென்னாட்டுப்பூலி ஞானி பண்புடனே பரமபதம் சேர்ந்ததனறே” என்று கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi