தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டத்தில் நெற்கட்டும்செவலில் அமைந்திருக்கிறது மாமன்னன் பூலித்தேவனின் மாளிகை. இந்த மாளிகையானது சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் அனுமதிக்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
ஆனால் இங்கு பராமரிப்பு பணி சரியாக இல்லாமல் சுவர்கள் மற்றும் மேல் தளங்கள் இடிந்தநிலையில் இருப்பதாகவும்,இங்கு ஓலைச்சுவடி வைப்பதற்காக இருக்கும் இடங்கள் பழுதாக இருப்பதாகவும்இந்த அரண்மனையில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இங்குள்ள காவலாளி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பூலித்தேவன் மாளிகை திறக்கும் பொழுது இருந்த பல கலைப் பொருட்கள், அவர் பயன்படுத்திய வாள்போன்றவைகள் காணாமல் போய்விட்டது. இன்னும் முறையான பாதுகாப்பு இல்லை என்றால் இருக்கும் பொருளும் தொலைந்து விடும் என்ற அச்சம்உள்ளது.
இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் காவலாளிக்கு மாதத்திற்கு 2,000 ரூபாய் தான் கூலியாக கொடுக்கப்படுகிறது என்று வேதனை அளித்துள்ளார் இந்த பூலித்தேவன் மாளிகையின் காவலாளி ராமர்.
25 வருடமாக பணி செய்து வந்தும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திலிருந்து, வெறும் 2,000 ரூபாய் மட்டுமே மாதத்திற்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் அதில் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வறுமையான சூழ்நிலையில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த சம்பளம் போதியதாக இல்லை என்றும் ராமர் வேதனை தெரிவித்துள்ளார்.
புலித்தேவன் மாளிகையில் ஓலைச்சுவடிகள் வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடம் கரையான்கள் அரித்து பழுதாக இருப்பதால் ஓலைச்சுவடிகள் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வண்ணம் பொருத்தப்பட முடியவில்லை.மேலும் பூலித்தேவன் மாளிகையில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் கலைக்கூடத்தில் மேல் தளங்கள் இடிந்த நிலையில் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
மாமன்னன் பூலித்தேவன் மாளிகை இங்கதான் இருக்கா? இது தெரியாம போச்சே!
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi