ஹோம் /தென்காசி /

வாசுதேவநல்லூரில் கழிப்பறை வசதி கூட இல்லாத பூலித்தேவன் திருமண மண்டபம்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

வாசுதேவநல்லூரில் கழிப்பறை வசதி கூட இல்லாத பூலித்தேவன் திருமண மண்டபம்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

X
பூலித்

பூலித் தேவர் திருமண மண்டபம்

Tenkasi | வாசுதேவநல்லூரிலுள்ள பூலித் தேவன் திருமண மண்டபத்தில் கழிவறை வசதி இல்லாமல் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vasudevanallur, India

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டத்தில் நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவு திருமண மண்டபம் உள்ளது.

இந்த திருமண மண்டபமானது வாசுதேவநல்லூர் யூனியனுக்கு கீழ் அமைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.5,000 வீதம் திருமணம் நடத்துபவர்களிடமிருந்து வாசுதேவநல்லூர் யூனியனுக்கு செலுத்த வேண்டும்.

ஆனால் இந்த திருமண மண்டபம் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து இடிந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த திருமண மண்டபத்திற்கு வருபவர்கள் இங்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

வெளியூரில் இருந்து இந்த மண்டபத்தை பயன்படுத்துபவர்களுக்கு கழிப்பறை சுத்தமாக இல்லாதது பெரும் சிக்கலாக இருக்கிறது. மேலும் இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் சுவர்கள் மற்றும் மேல் தளங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

ரூ.2,000 மட்டுமே மாதச் சம்பளம்... வேதனையில் பூலித் தேவன் மாளிகை காவலாளி

பூலித்தேவன் கோட்டையின் பின்புறத்தில் பாதி பகுதிதான் திருமண மண்டபமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் சமையலறையில் உள்ள மேல் தளங்கள் முழுவதுமாக இடிந்த நிலையில் இருக்கிறது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அச்சத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. பூலித்தேவன் திருமண மண்டபத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi