முகப்பு /தென்காசி /

தென்காசியில் புதுமைப்பெண் திட்டம்.. 2,300 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!

தென்காசியில் புதுமைப்பெண் திட்டம்.. 2,300 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!

X
புதுமைப்பெண்

புதுமைப்பெண் திட்டம்

Tenkasi pudumai pen scheme | தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 37 கல்லூரிகளின் கீழ் 1418 மாணவிகள் பயன்பெற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக 37 கல்லூரிகளில் பயிலும் 859 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

தென்காசி மாவட்டம், இ.சி.ஈ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை வங்கி கணக்கு அட்டைகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவின் பேரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கல்வி பயின்று உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 37 கல்லூரிகளின் கீழ் 1418 மாணவிகள் பயன்பெற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக 37 கல்லூரிகளில் பயிலும் 859 மாணவிகள் பயன்பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

First published:

Tags: Govt Scheme, Local News, Tenkasi